வேலூர் மாவட்டத்தில், உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, அகில இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் சார்பில், வேலூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு, புற்றுநோய் விழிப்புணர்வு முகாம், காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக அரங்கில் நேற்று(பிப். 24) நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் சரக டிஐஜி காமினி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுகார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் இதில் மருத்துவர்கள் கனகவேல், ராஜவேலு ஆகியோர் புற்றுநோய் குறித்து விளக்கவுரையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசுகையில், “பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதை உணர்ந்து, பெண் காவலர்கள் தங்கள் உடல் நிலையை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை, மார்பகம், தொண்டை ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புற்று நோய் பாதித்தவர்கள் மனம் தளராமல் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டு