இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், 28 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மத்திய சிறையில் சிறப்புப் பகுதியில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அக்டோபர் 18ஆம் தேதி முருகனின் அறையில் இருந்து தொலைபேசி ஒரு சிம்கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து முருகன் உயர்பாதுகாப்பு பிரிவு மூன்றில் இருந்து ஒன்றிற்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து வேலூர் மத்தியச் சிறைத் துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், விதிகளை மீறி தொலைபேசி வைத்திருந்ததாக பாகாயம் காவல் நிலையத்தில் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.