வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த பனமடங்கி கிராமத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திராவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்துகொண்டன.
விழாவில் முதல் பரிசாக 65 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 55 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 45 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டன. கால அளவிற்குள் பந்தைய எல்லையை குறைந்த நேரத்தில் கடக்கும் எருதுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.