வேலூர் மாநகர் சித்தேரி பகுதியை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி பிரகாஷ் (26). அதே பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (40). இவர் பிளக்ஸ் பேனர் கடை நடந்தி வருகிறார். நடந்து முடிந்த மாநகராட்சி வார்டு தேர்தலில் 59ஆவது வார்டில் பாமக சார்பில் கட்டட தொழிலாளி பிரகஷும், ராமகிருஷ்ணனும் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது, பாமக தலைமை பிரகாஷுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு ராமகிருஷ்ணனை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். ஆனால், அந்த தேர்தலில் இருவருமே தோல்வி அடைந்துள்ளனர். அதன் பின்னர் பாமகவில் இருந்து விலகிய ராமகிருஷ்ணன் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் தேர்தல் போட்டி காரணமாகவும், ஊர் கோயில் கும்பாபிஷேகதின் போதும் ஏற்பட்ட மோதல் காரணமாகவும் பிரகஷுக்கும், ராமகிருஷ்ணனுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு, வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (பிப் 11) தொரப்பாடி தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி அருகே பிரகாஷ் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து சென்று மடக்கிய ராமகிருஷ்ணன், தான் வைத்திருந்த உருட்டு கட்டையால் பிரகாஷின் தலையில் பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.