வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் புது தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி வேளாங்கண்ணி (வயது 39). இவர்களுக்கு ஷாலினி (19) என்ற ஒரு மகள் மட்டும் உள்ளார்.
ஆரோக்யதாஸ் சிஎம்சி மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வேளாங்கண்ணிக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த 30 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் மூளைச்சாவு அடைந்தார்.