இலங்கையில் தேவாலயம், நட்சத்திர விடுதிகள் என கடந்த 21ஆம் தேதி அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 253 பேர் பலியாகினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் ரயில்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என அம்மாநில காவல்துறையினர் எச்சரித்தனர். இதையடுத்து தமிழகத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுதும் பல இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிகுண்டு தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை: வேலூரில் போலீஸார் தீவிர சோதனை! - தீவிர
வேலூர்: வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து வேலூர் மாவட்டத்தில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சில்க் மில்க் பேருந்து நிலையத்தில் பிரபல தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு பிவிஆர் சினிமாஸ் என்ற பெயரில் திரையரங்கம் உள்ளது. விடுமுறை தினங்களில் பொதுமக்கள் அதிகம் வருவார்கள் எனவே காட்பாடி காவல் துறையினர் பிவிஆர் சினிமா திரையரங்கிற்கு சென்று அங்கு தீவிர சோதனை நடத்தினர். அப்போது படம் பார்க்கச் சென்று அனைவரையும் தனித்தனியாக மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதித்தனர்.
மேலும் சந்தேகப்படும்படியாக நபர்கள் எவரேனும் நடமாடினால் தங்களுக்கு உடனே தகவல் கொடுக்கும்படியும் காவல்துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தினர். காட்பாடி டிஎஸ்பி சங்கர் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.