தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தம்பி சாவில் சந்தேகம்.. 4 மாதம் கழித்து தோண்டி எடுக்கப்பட்ட உடல்.. வேலூரில் நடந்தது என்ன? - இறப்பில் சந்தேகம்

அணைக்கட்டு அருகே தம்பி இறப்பில் மர்மம் இருப்பதாக அண்ணன் போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில், 4 மாதம் கழித்து சடலத்தை தோண்டி எடுத்து அரசு அதிகாரிகள் முன்னிலையில் உடற்கூராய்வு நடத்தப்பட்டது.

4 மாதம் கழித்து தோண்டி எடுக்கப்பட்ட சடலம்
4 மாதம் கழித்து தோண்டி எடுக்கப்பட்ட சடலம்

By

Published : Mar 10, 2023, 11:25 AM IST

4 மாதம் கழித்து தோண்டி எடுக்கப்பட்ட சடலம்

வேலூர்:அணைக்கட்டு அடுத்த மழைச்சந்து கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (35). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயபிரியா என்பவருடன் திருமணம் ஆனது. திருமணமான 2 நாட்களில் மனைவியை பிரிந்து அண்ணனுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் அதிக கடன் பிரச்னையால் மன உளைச்சலில் இருந்த நடராஜன், ஊசூர் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான புளியந்தோப்பில் விஷம் அருந்திவிட்டு, தனது எதிர் வீட்டில் வசிக்கும் சத்யா என்பவரிடத்தில் புளியந்தோப்பு பகுதியில் விஷம் குடித்துவிட்டு படுத்து கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சத்யா நடராஜனின் நண்பரான கோபி என்பவருக்கு தொலைப்பேசி மூலம் இந்த தகவலைக் கூறியுள்ளார். தகவலறிந்த கோபி உடனடியாக நடராஜன் அண்ணன் சேட்டு என்பவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்குச் சென்று மயக்க நிலையிலிருந்த நடராஜனை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் அங்கு தொடர்ந்து மூன்று நாள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உடல்நிலை மோசமானது உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து ஒரு மாதம் சிகிச்சையிலிருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறிது உடல் நலம் தேறிய பின் நடராஜனைக் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்து 3 நாட்கள் கடந்த நிலையில், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணத்தினால் உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே நடராஜன் இறந்துள்ளார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் மருத்துவமனையிலிருந்து உடலைக் கொண்டுவந்து உடனடியாக சின்ன கெங்கநெல்லூர் சுடுகாட்டில் சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.

இதன்பின் அவரின் அண்ணன் சேட்டு என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது தம்பி இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி அரியூர் காவல் நிலையம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன்பின் நேற்று (மார்ச் 9) வேலூர் மருத்துவமனை சட்டம் சார்ந்த மருத்துவர் பொறுப்பு மற்றும் பேராசிரியர் கலைச்செல்வி, அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், அரியூர் இன்ஸ்பெக்டர செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் 4 மாதத்திற்க்கு முன்பாக புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து அங்கேயை உடற்கூராய்வு செய்யப்பட்டது.

பின்னர், நடராஜனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், ஆய்வின் முடிவுகள் வந்த பிறகே மற்ற விபரங்கள் தெரியும் என்றும் மருத்துவர் கலைசெல்வி கூறினார்.

இதையும் படிங்க: பெண் தோழியுடன் விடுதியில் உல்லாசம்.. ஆண் நண்பர் மரணத்தில் திடீர் திருப்பம்!

ABOUT THE AUTHOR

...view details