தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி உடைந்து போய்விட்டது: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

வேலூர்: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி உடைந்து போய்விட்டது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி உடைந்து போய்விட்டது
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி உடைந்து போய்விட்டது

By

Published : Jan 4, 2021, 6:52 AM IST

வேலூர் மாவட்டம் மாங்காய் மண்டி அருகே பாஜகவின் அணி, பிரிவு பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் அதன் மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசுகையில், "தமிழ்நாடு அரசியலில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் திமுகவிற்கு அழிவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை காட்டுகிறது.

இன்றைக்கு திமுக குடும்பத்தை சேர்ந்த சகோதரர் அழகிரி தனியாக கட்சி ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். அதேபோல் திமுகவின் கூட்டணி கட்சிகள் நாங்கள் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் எனக் கூறியுள்ளனர்.

அந்த கூட்டணி உடைந்து போய்விட்டது. ஆகையால் நாம் அனைவரும் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக எங்கே என்று கேட்டவர்கள், இன்றைக்கு வந்து பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பாஜக பரவியுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமாரி வரை தினந்தோறும் பல லட்சம் பேர் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். வரும் 100 நாளில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி உடைந்து போய்விட்டது

2014க்கு முன்பு விவசாயிகளின் தற்கொலை என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த வேண்டி பிரதமர் மோடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆனால் மு.க. ஸ்டாலின் விவசாய திருத்த சட்டங்களை எதிர்த்து வருகிறார்.

இதனை எதிர்த்து திமுக நடத்திய ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவை தோல்வி அடைந்தன. அதே தோல்வியை வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் கொடுக்க தமிழ்நாடு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

சமூக நீதி பற்றி பேசும் திமுக, கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணிற்கு பதில் சொல்லாமல், தரம் குறைவாக திட்டி கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். இதுதான் அவர்கள் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை" என்றார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் கடைசிவரை முதலமைச்சர் ஆக முடியாது- மு.க. அழகிரி

ABOUT THE AUTHOR

...view details