தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பைக் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய டிப் டாப் திருடன் - பைக் திருடும் சிசிடிவி காட்சி

வேலூர் ஆட்சியர் அலுவகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு ஊழியரின் இருசக்கர வாகனம் திருடுபோன சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தை திருடிய டிப் டாப் திருடன்
இருசக்கர வாகனத்தை திருடிய டிப் டாப் திருடன்

By

Published : Apr 1, 2022, 7:37 AM IST

வேலூர்:அணைகட்டு அடுத்த நாராயணபுரத்தை சேர்ந்தவர் கோபி (29). இவர் சத்துவாச்சாரியிலுள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தபால் நிலையத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

பணி முடித்து விட்டு வந்து பார்த்தபோது அங்கிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஆட்சியர் அலுவகத்திலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது முகக்கவசம் அணிந்து, டிப் டாப்பாக வந்த அடையாளம் தெரியாத ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.

இருசக்கர வாகனத்தை திருடிய டிப் டாப் திருடன்

இதனையடுத்து கோபி அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து சத்துவாச்சாரி காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:விருதுநகர் பாலியல் வழக்கு: 2ஆம் நாளாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை

ABOUT THE AUTHOR

...view details