வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் குடியாத்தம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகத்தின் பேரில் அவரை காவல்துறையினர் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்த நபர் குடியாத்தம் காளியம்மனபட்டியைச் சேர்ந்த சுதாகர்(39) என்பதும் இவர் அரசு போக்குவரத்து கழகம் குடியாத்தம் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், திருட்டு வண்டி என்றும் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தம் பணிமனையில் உடன் பணிபுரிபவரின் வாகனத்தை திருடியதும் தெரியவந்தது.