வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே செல்லப்பள்ளி கிராமத்தில் பேர்ணாம்பட்டிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில், நேர் எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கொத்தப்பல்லியைச் சேர்ந்த நிதிஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொரு வாகனத்தில் வந்த சாத்கர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (32), இவரது மகள்கள் தேவயானி(7), சந்தியா ஆகியோர் படுகாயமடைந்தன நிலையில், ஆம்புலன்ஸில் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், தந்தை கார்த்தி, மகள் தேவயானி ஆகியோர் உயிரிழந்தனர்.