தமிழ்நாட்டில் கரோனாவின் இரண்டாவது அலை காரணமாகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (ஏப்ரல் 26) முதல் அமலுக்கு வந்தது. இதில் ஊரடங்கின் ஒரு பகுதியாக சலூன், அழகு நிலையங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேலூர் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஏப்ரல் 26) மனு அளிக்கப்பட்டது.
அதில், "கடந்தாண்டு ஊரடங்கினால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கடன் தொல்லையினால் வாடிவருகிறோம், பலரும் தற்கொலை செய்துகொண்டனர்.
அரசின் கடந்த ஆண்டு நிவாரண உதவித் தொகைகூட இன்னும் கிடைக்கவில்லை இச்சூழலில் அரசு மீண்டும் சலூன் கடைகளை மூட கட்டுப்பாடு விதித்துள்ளது.
எனவே இந்த அறிவிப்பினை மறு பரிசீலனை செய்து நேர கட்டுப்பாடுகள், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.