தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கியில் பணம் செலுத்த வந்த பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை

வேலூர்: ஆம்பூரில் இயங்கி வரும் கனரா வங்கியில் வரிசையில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 50,000 கொள்ளையடித்து சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

thef

By

Published : Nov 13, 2019, 9:43 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜியா. கணவனை இழந்த இவர் தனது பிள்ளைகளுடன் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை தனது வங்கிக் கணக்கில், செலுத்துவதற்காக பஜார் பகுதியில் அமைந்துள்ள கனரா வங்கிக்கு வந்துள்ளார்.

கனரா வங்கியில் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை செலுத்திவிட்டு, மீதமுள்ள பணத்தை இந்தியன் வங்கியில் செலுத்துவதற்காக, தனது பையில் தனியாக எடுத்து வைத்திருந்தார். இந்நிலையில், தான் செலுத்திய பணம் குறித்த விவரத்தை அச்சிடுவதற்காக கனரா வங்கியில் உள்ள இயந்திரம் முன்பு வரிசையில் நின்றிருந்தார். அப்போது, தனது பையைப் பார்த்த விஜியா, அதில் வைத்திருந்த பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சிசிடிவியில் சிக்கும் பெண்

உடனடியாக வங்கி மேலாளரைச் சந்தித்து நடந்ததைத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், கனரா வங்கியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை சோதனை செய்தனர்.

அதில், விஜியாவின் பின்புறம் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், சுற்றும் முற்றும் யாரும் வருகிறார்களா என்பதைப் பார்த்துவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் யாருக்கும் தெரியாத வகையில், விஜியாவின் பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாகச் செல்கிறார். இந்தக் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது, கண்காணிப்புக் காட்சிகளை ஆதாரமாக வைத்து, வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் நகர காவல் துறையினர் பணத்தை திருடிச் சென்ற பெண்ணை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பணத்தை இழந்து தவித்த பெண்

மேலும், இதற்கும் முன்பும் இதே வங்கியின் முன்பு இருசக்கர வாகனத்தில் பணம் எடுக்க வந்த பெண்ணை, திசை திருப்பி நூதன முறையில் 30 சவரன் நகைகள் மற்றும் 35 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அதேநிலையில், கொள்ளைச் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள், அதே வங்கியில் மற்றொரு கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பரோலில் வெளிவந்த பேரறிவாளனின் முதல் நாள்!

ABOUT THE AUTHOR

...view details