தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்: காவல் துறையினர் விசாரணை - Baby found dead in Villupuram

விழுப்புரம் நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்
எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

By

Published : May 25, 2021, 5:39 PM IST

விழுப்புரம் - மங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள கழிவுநீர் கால்வாயில் எரிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தையின் சடலம் நேற்று (மே.24) கிடந்துள்ளது. இதனைக் கண்ட மக்கள் இது குறித்து வேலூர் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் குழந்தை பிறந்து மூன்று நாள்களே ஆகியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் குழந்தையின் பாலினம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், கூடுதல் விசாரணையில் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்துத் தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details