தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் ’100% வாக்களிப்போம்’ வாசகம் பொறித்து விழிப்புணர்வு! - ஆவின் பால்

வேலூரில் அம்மாவட்டத் தேர்தல் அலுவலர் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், விழிப்புணர்வு வாசகங்கள் பொறித்தும் 100 விழுக்காடு வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மெற்கொண்டு வருகிறார்.

100% வாக்களிப்போம்
100% வாக்களிப்போம்

By

Published : Mar 25, 2021, 8:00 AM IST

வேலூர்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோர்தலுக்கான ஏற்பாடுகள் பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர்களுக்கு மாவட்ட வாரியான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் வேலூரில் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், விழிப்புணர்வு வாசகம் பொறித்தும் 100 விழுக்காடு வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். முதல் பகுதியாக நேற்று (மார்ச். 24) "100 விழுக்காடு வாக்களிப்பீர், வாக்களிப்பது நமது கடமை" என்ற விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட ஆவின் பால் பாக்கெட்டுகளை வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் வெளியிட்டார். இதன் மூலம் 1.42 லட்சம் ஆவின் பால் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், மேலும் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்களை இதன் மூலம் கவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று (மார்ச்.25) "100% வாக்களிப்போம்" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் எரிவாயு சிலிண்டர்களில் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், இதனையும் வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details