வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரநாத், இவர் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சுரேந்திரநாத்துக்கும், ராதிகா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு பணிக்கு திரும்பிய அவருக்கு ஊரடங்கு அமலுக்கு முன்பு விடுமுறை கிடைத்து கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தார்.
இந்நிலையில் வீடு திரும்பிய சுரேந்திரநாத்திற்கும் அவரது மனைவிக்குமிடையே மனவருத்தம் ஏற்பட்டு தகராறில் முடிந்துள்ளது. இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் மனைவியை விட்டு தனியாக இருந்த சுரேந்திரநாத் மனமுடைந்து அவரது வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக்கண்ட அவரது தாயார் அதிர்ச்சியடைந்து பரதராமி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.