இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவான ’தர்பார்’ படம் இன்று உலகமெங்கும் வெளியானது. இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டடது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படத்தின் சிறப்புகாட்சியில் ஆற்காடு ரஜினி ரசிகர்கள் திரையரங்கு முன் 'தர்பார்' பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொங்கலோ பொங்கல் 'தர்பார்' பொங்கல் - ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டம் - தர்பார் சிறப்புகாட்சி கொண்டாட்டம்
ராணிப்பேட்டை: தர்பார் வெளியான திரையரங்கு முன்பு ரசிகர்கள் பொங்கல் வைத்துக்கொண்டாடினர்.
fdfs
திரையரங்க வளாகத்தை கரும்புகள் மூலம் அலங்கரித்த ரசிகர்கள், திரைப்படம் வெளியான நாளை பொங்கலாகவே கருதி அடுப்பு மூட்டி பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வந்த வேளையில் பொங்கலோ பொங்கல் ’தர்பார்’ பொங்கல் என்ற முழக்கங்களை எழுப்பியவாறு கொண்டாடினர். பின் அதிகாலை 5 மணிக்கு சிறப்புகாட்சி திரையிடப்பட்டது.