வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஊராட்சி அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 6) இரவு வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத 92 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊராட்சி உதவி இயக்குநர் செந்தில்வேல் மீது ஊழல் தடுப்பு நடவடிக்கையின் கீழ், வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஊழல் புகார்: ஊராட்சி இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை! - வேலூர் மாவட்ட செய்திகள்
வேலூர்: ஊழல் தொடர்பாக ஊராட்சி இயக்குநர் செந்தில்வேல் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ராசிபுரம் அருகே அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
![ஊழல் புகார்: ஊராட்சி இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை! panchayat director home](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9466840-687-9466840-1604748007396.jpg)
panchayat director home
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சியில் உள்ள செந்தில்வேலின் வீட்டில் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழுவினர் இன்று (நவம்பர் 7) சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வீட்டில் உள்ளவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.