வேலூர் காட்பாடி தாரப்படவேடு பகுதியைச் சேர்ந்தவர் லிபேந்தர் பாபு (40). இவர் காட்பாடி துணை பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹம்சா பள்ளிகொண்டா அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.
துணை பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை! - anti corruption department raid in sub registrar office worker
வேலூர்: துணை பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுபவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதில், கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் இவர்களை கண்காணித்து வந்ததில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரிய வந்தது. இவர்கள் இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து இன்று (டிச. 01) தாரப்படவேட்டில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளர் ஹேம சித்திரா தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் ஆய்வாளர் விஜயகாந்த் அடங்கிய குழுவினர் கணக்கில் வராத சொத்து ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.