வேலூர்:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூ.12 லட்சம் நன்கொடை அளித்த முன்னாள் பல்கலைக்கழக ஸ்டார்ஸ் (Stars) மாணவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டும் என்றும் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக (VIT University, Chennai) கிராமப்புற மாணவர்களின் கல்வி திட்டம் ஸ்டார்ஸ் நாளில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா அறிவுரை வழங்கினார்.
கிராமப் புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூ.12 லட்சம் பணத்தை நன்கொடையாக முன்னாள் பல்கலைக்கழக ஸ்டார்ஸ் மாணவர்கள் அளித்துள்ளனர். வளர்ந்துவரும் அறிவியல் உலகிற்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா (Innocent Divya IAS) நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் Stars திட்டத் தின் கீழ் கிராம பகுதிகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி அளித்து வருகிறது. இதனையடுத்து ஸ்டார்ட்ஸ் மாணவர்கள் சந்திப்பு இன்று (மே 28) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா அந்நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.
இதையும் படிங்க:"புதிய நாடாளுமன்ற கட்டடம் எம்.பி.க்களுக்கு உத்வேகம் அளிக்கும்" - சபாநாயகர் ஓம் பிர்லா!