வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நேற்று முன்தினம் (பிப். 22) நடைபெற்றது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்ததை நிறைவேற்றக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவைகளாவன:
- அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும்,
- அகவிலையுடன் கூடிய ஓய்வூதியம், முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவிக்க வேண்டும்,
- பணி ஓய்வின்போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கி உத்தரவிட வேண்டும்