வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மாலை வேலூர் நேஷனல் திரையரங்கம் அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மகிமை செல்வன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். சோதனை செய்யப்பட்ட காரில் 10 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
காரில் பத்து லட்சம் ரூபாய் பறிமுதல் -பறக்கும் படையினர் அதிரடி
வேலூர்: தனியார் நிறுவன முகவர் காரில் எடுத்துச் சென்ற 10 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பத்து லட்சம்
இதுகுறித்து காரில் வந்த நபரிடம் அலுவலர்கள் விசாரித்தபோது அவர் காட்பாடியைச் சேர்ந்த பிரவீன் ராஜ் என்பதும் அவர் பிரபல தனியார் நிறுவனமான ஐடிசியின் முகவர் என்பதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் வங்கியில் செலுத்துவதற்காக பணம் கொண்டு சென்றதாக பிரவீன் ராஜ் தெரிவித்தார். இருப்பினும் முறையான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதன்பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 10 லட்சம் ரூபாய் பணம் வேலூர் வட்டாட்சியர் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.