சசிகலா பிறந்தநாள் நேற்று (ஆக.18) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அமமுக சார்பில் வேலூர் அண்ணா சாலையில் உள்ள சாலையின் நடுவே வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளில் வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சசிகலா பிறந்தநாள்: சுவரொட்டி ஒட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு - Vellore Latest News
வேலூர்: சசிகலா பிறந்த நாளையொட்டி பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியதாக இருவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ammk poster issue
பொது இடங்களில் போக்குவரத்து பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.
இது தொடர்பாக, சுவரொட்டி ஒட்டும் தொழிலில் ஈடுபட்ட ராஜாமணி (45), அண்ணாமலை (25) ஆகிய இருவர் மீது வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.