தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான் உங்கள் மண்ணின் மைந்தன்: அமமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு...! - மண்ணின் மைந்தன்

வேலூர்: நான் உங்கள் மண்ணின் மைந்தன் உங்கள் பகுதியைச் சேர்ந்தவன் என உருக்கமாகப் பேசி அமமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

அமமுக வேட்பாளர்

By

Published : Mar 31, 2019, 9:05 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் பார்த்திபன் அவர்களின் அறிமுகக் கூட்டம் கேஜி கண்டிகையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட நகர பேரூர் கழக ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் பார்த்திபன் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 40 இடங்களிலும் அமமுக அமோக வெற்றி பெறும். அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மற்றும் பாமக வேட்பாளர் ஆகிய இருவருமே வெளியூரைச் சேர்ந்தவர்கள். முன்னதாக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்ற பின் தொகுதி மக்களை ஒருபோதும் சந்திக்கவில்லை. தொகுதிக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை பாராளுமன்றத்தில் தொகுதிக்காக எந்த ஒரு கோரிக்கையையும் முறையிடவில்லை என விமர்சித்தார்.

நான் உங்கள் மண்ணின் மைந்தன் உங்கள் பகுதியைச் சேர்ந்தவன் என்னை வெற்றி பெறச் செய்தால் உங்கள் பிரச்சினைகளை எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்தித்து கூறலாம். நான் உங்கள் பகுதிக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் நேரில் சென்று வந்து உங்கள் குறைகளை தீர்ப்பேன் என்று அவர் உறுதி அளித்தார்.


ABOUT THE AUTHOR

...view details