தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்க்கரை ஆலை ஊழியர்கள் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்! - ambur sugarmill employees third day protest

வேலூர்: ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

sugarmil protest

By

Published : Nov 19, 2019, 3:41 AM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடபுதுப்பட்டு கிராமத்தில் 1961ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜால் தொடங்கப்பட்ட ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு ஆரம்ப காலத்தில் சுமார் 1,500 ஊழியர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து 250 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், பருவகாலத்தில் அதிகளவு கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டதால், கரும்புகளை அரவைச் செய்ய போதியளவு ஊழியர்கள் பற்றாக்குறை நிலவியது. இதை சமாளிக்கும் விதமாக ஆலை நிர்வாகம் தற்காலிக ஊழியர்களை பணியமர்த்தியது. தொடர்ந்து ஆலைக்கு கரும்பு வந்ததால் தற்காலிக ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படாமல், ஆலை நிர்வாகம் தொடர்ந்து பணி வழங்கி வந்தது.

தற்போது கரும்பு வரத்து குறைந்துள்ளதால், ஊதிய செலவைக் குறைக்கும் வகையில் பருவகாலத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பது தற்காலிக ஊழியர்களுக்கு பேரடியாக இருந்தது. இதை கண்டிக்கும் வகையிலும், மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சர்க்கரை ஆலை ஊழியர்கள்

இதனைத் தொடர்ந்து, 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை முதல் இன்று வரை மூன்றாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த பணிநீக்கம் குறித்தும் ஆலைக்கு சீரான கரும்பு அரவை கிடைத்திடவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:பணி வழங்கக்கோரி சர்க்கரை ஆலை தற்காலிக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details