வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர் முழுவதும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை விற்பனை செய்ததாக நகராட்சி நிர்வாகிகளுக்கு புகார் வந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் திடீரென அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழி பறிமுதல்! - வெல்லொரெ
வேலூர்: ஆம்பூர் பஜார் கடைகளில் திடீரென ஆய்வில் ஈடுபட்ட நகராட்சி அலுவலர்கள் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழிப் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
தடை
அப்போது ஒரு லட்சம் மதிப்பிலான நெகிழி கப்புகள், தட்டுகள், பாலிதீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை, நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்குக்கு மறுசுழற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் நெகிழிப் பொருட்களை வைத்திருந்ததாக கிருஷ்ணா பேப்பர் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.