வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள துத்திப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த மூன்று மாதகாலமாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து, தங்கள் பகுதியில் நீர் தேக்கத் தொட்டி இருந்தும் ஏன் குடிநீர் வரவில்லை என ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பல முறை முறையிட்டுள்ளனர். இதற்கு மின் மோட்டார் சரிவர இயங்கவில்லை என ஊராட்சி நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்! - ROAD STROKE
வேலூர்: குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வெகு நாட்களாக குடிநீர் வழங்காமல் இருப்பதுடன், ஒரு குடம் தண்ணீரின் விலை ரூ. 6 என உயர்த்திய ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் - பேர்ணாம்பட்டு சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் பேருந்தை சிறைபிடித்ததாக காவல்துறைக்கு தகவல் வந்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இப்பிரச்சனை தீர்க்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.