தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர்: தீ விபத்தில் உயிரிழந்த பசுக்கள்...! - Vellore

வேலூர்: திடீரென மாட்டுத்தொழுகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பசு மாடுகளும், 2 கன்றுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

By

Published : Apr 14, 2019, 11:58 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டித்தோப்பு பெத்தலேகம் பகுதியை சேர்ந்தவர் தேவன். விவசாயியான இவர் அதே பகுதியில் பல வருடங்களாக மீன் பண்ணை மற்றும் மாடுகள் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் இன்று மாலை இவரது மாட்டுத்தொழுவம் மேலே செல்லும் மின் இணைப்பில் மின் கசிவு ஏற்பட்டது. ஓலைகளால் கட்டப்பட்ட தொழுவத்தின் மீது தீப்பொறிகள் விழுந்ததால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அதிகமாக வீசிய காற்றினால் 2 நிமிடங்களுக்குள் தீ மளமளவென தொழுவம் முழுவதும் பரவியது.

அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் தீ முழுவதும் பரவியதால் தொழுவத்தில் கட்டிவைக்கப்பட்டுருந்த இரண்டு கன்று குட்டி மற்றும் இரண்டு பசுமாடுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.

ABOUT THE AUTHOR

...view details