வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் வினோத்(19). கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண் குமார் (20) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு கன்னடிகுப்பம் கிராமத்தில் தேர்த் திருவிழா நடைப்பெற்றது. அப்போது வினோத்திற்கும் அருணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் தன்னுடையை நண்பர் ராஜ் என்பவருடன் சேர்ந்து வினோத்தை கத்தியால் சரிமாரியாக தாக்கியுள்ளனர்.
ஆம்பூர் அருகே தேர்த்திருவிழாவில் இளைஞருக்கு கத்திகுத்து! - Vellore
வேலூர்: முன்விரோதம் காரணமாக தேர்திருவிழாவின் போது இளைஞரை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
ஆம்பூர் அருகே தேர்திருவிழாவில் இளைஞர் ஒருவருக்கு கத்திகுத்து
இதனால் வயிறு, முதுகு பகுதியில் பலமாக அடிப்பட்ட நிலையில் வினோத்தை மீட்ட அவரது நண்பர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், அருண்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாகியுள்ள ராஜ் என்பவரை தேடி வருகின்றனர். தேர்த் திருவிழாவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.