தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுத்தை கடித்து 3 ஆடுகள் பலி! கிராமமக்கள் அச்சம் - சிறுத்தை வனவிலங்கு

வேலூர்: ஆம்பூர் அருகே அபிகிரிப்பட்டரை கிராமத்தில் சிறுத்தை கடித்து குதறியதில் மூன்று ஆடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

wild animal

By

Published : Feb 15, 2019, 2:36 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அபிகிரிப்பட்டரை என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இந்த வனப்பகுதியில் இவருக்குச் சொந்தமாக நிலம் உள்ளதால், அங்கேயே விவசாயம் செய்துவருகிறார்.

கடந்தவாரம் ஆடுகள் வளர்க்க விருப்பப்பட்ட வெங்கடேசன், நான்கு ஆடுகளை விலைக்கு வாங்கி அதனை தனது நிலத்தில் கட்டி வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை தன் நிலத்திற்கு வந்து பார்த்தபோது மூன்று ஆடுகள் சிறுத்தையினால் தாக்கப்பட்டு உடல் சிதறிகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும், கட்டிவைக்கப்பட்டிருந்த மற்றொரு ஆட்டை சிறுத்தை இழுத்து சென்றிருந்தது. இதுகுறித்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத் துறையினர் இறந்த ஆடுகளை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

இதைப்போலவே, கடந்த 2018 டிசம்பர் மாதம் இப்பகுதியில் சிறுத்தையினால் கன்றுக்குட்டி தாக்கப்பட்டு உயிரிழந்தது. ஒரு மாத இடைவெளியில் நடைபெற்ற இச்சம்பவத்தால் இப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details