தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விதிகளை மறந்த வாகன ஓட்டி; பதறவைக்கும் சிசிடிவி காட்சி! - accident

வேலூர்: ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலையை கடக்க முயன்று விபத்தில் பலியானார்.

சாலை கடக்க முயன்றவர் விபத்தில் பலி

By

Published : Jul 17, 2019, 6:38 PM IST

Updated : Jul 18, 2019, 12:57 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலையை சற்றும் கவனிக்காமல் கடக்க முற்பட்டபோது, கார் ஒன்று மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

சிசிடிவி காட்சி


இறந்தவர் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பதும், நேற்றிரவு பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில் விபத்து ஏற்பட்டிருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

சிசிடிவி காட்சி


முன்னதாக, சென்னை நந்தனம் சாலையில், ஜூலை 16ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் நகர சாலைகளில் செல்ல நிர்ணயிக்கப்பட்டுள்ள வேக அளவையும் மீறி பேருந்துக்கும் வேறு ஒரு இரு சக்கர வாகனத்துக்கும் இடையில் செல்ல முயன்றபோது இருவர் உயிரிழந்தனர்.

தலைக்கவசம் அணிந்தால் விபத்திலிருந்து தப்பிக்கலாம் எனக் கூறும் அரசு, பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்றவும், அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகிறது.

Last Updated : Jul 18, 2019, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details