தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய வாக்காளர்களைக் கவரும் வகையில் பள்ளி மாணவர்கள் பேரணி - வாக்காளர் தினம் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வாக்களிக்கும் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது

all over TN national voters day rally held
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

By

Published : Jan 25, 2020, 7:14 PM IST

திருப்பத்தூர்

வாக்காளர் தினத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைக் கவரும்வகையில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வுப் பேரணி சென்றனர். பேரணி திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் நடைபெற்றது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி சார்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக பேரணி நடைபெற்றது. பேரணியானது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து புறப்பட்டு பேருந்து நிலையம், பெரிய கடைத்தெரு மணிகூண்டு வழியாக நகராட்சி ஆணையர் அலுவலகம் சென்றடைந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுடன் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் 10ஆவது தேசிய வாக்காளர் தின விழா இன்று நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாகச் சென்றனர்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி

இதையும் படியுங்க: சிஏஏ, என்ஆர்சி-யை திரும்பப் பெறக்கோரி இஸ்லாமியர்கள் கண்டன பேரணி...!

ABOUT THE AUTHOR

...view details