தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் முழுமையடையும் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை - etv bharat

2024 இல் பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் முழுமையடையும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

By

Published : Aug 16, 2021, 6:32 AM IST

வேலூர்: நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ரங்காபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் வேலூர் கோட்டை எதிரே மக்கான் சிக்னலில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த ஒவ்வொரு திட்டமும் அற்புதமானது. அதை 10 ஆண்டுகளாக கேலி பேசி வந்த திமுக சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ளது. ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு ஆலையை எதிர்த்தவர்கள் இன்று ரூ.2,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.

2024 இல் பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் முழுமையடையும்

காங்கிரஸ் கட்சியில் தலைவர் இல்லாமல் உள்ளது. முதலில் அதற்கு ஒரு தலைவர் வேண்டும். கட்சி தேர்தல் நடத்தி பல ஆண்டுகள் ஆகிறது. செயல் தலைவரை வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

குழப்பம் மட்டும் அதிகமாக உள்ள கட்சி காங்கிரஸ். இதனால்தான் நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி வெங்கையா நாயுடுவையே அழ வைத்துவிட்டார்கள். 2024 இல் பிரதமர் மோடி கொண்டு வந்த அனைத்து திட்டமும் முழுமையடையும்" என்றார்.

இதையும் படிங்க:மனதை உருக்கும் குரல்... தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாரின் பாடல்: ViralVideo

ABOUT THE AUTHOR

...view details