திமுக துணை பொதுச் செயலாளரும் நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியது விமர்சனத்துக்குள்ளானது.
இது குறித்து, அதிமுக சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.