வேலூர்: குடியாத்தம் நகர மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் குப்பைகளை அள்ளாத நகராட்சியை கண்டித்து குப்பை தொட்டியுடன் நகர மன்ற கூட்டத்தில் 27வது வார்டு அதிமுக நகர மன்ற உறுப்பினர் சிட்டிபாபு கலந்து கொள்ள வந்தார்.
நகரமன்ற கூட்டத்திற்கு குப்பை தொட்டியுடன் வந்த அதிமுக உறுப்பினர்!! இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிட்டிபாபுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையர் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையும் படிங்க:ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்