தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் திமுக எம்எல்ஏ மீது அதிமுகவினர் புகார்! - அதிமுகவினர் புகார்

அதிமுகவின் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு தலைமையிலான அதிமுகவினர் எஸ்பி-யிடம் புகார் மனு அளித்தனர்.

அதிமுகவினர் புகார்
அதிமுகவினர் புகார்

By

Published : Jun 9, 2021, 10:34 PM IST

வேலூர்: திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாரிடம் அதிமுகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த புகர்ர் மனுவில் கூறியதவது, “கரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் வேலூரைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண பொருள்களை வழங்கி வருகிறோம்.

இதனை, திமுகவினர் தடுப்பதோடு மட்டுமல்லாமல், சமூகவலைதளங்களிலும் அவதூறாக விமர்சித்து வருகின்றனர். தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினரை ஏவி விட்டு பொய்யான வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இது மிகவும் கண்டனத்திற்குரியது, ஆகவே வேலூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் உள்பட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளர்.

இதையும் படிங்க: கழிவுகள் மேலாண்மை விதிகள் அமல்: மருத்துவக் கழிவுகளை பிரிக்க, சேமிக்க கட்டுப்பாடுகள்!

ABOUT THE AUTHOR

...view details