தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2021, 10:46 AM IST

ETV Bharat / state

காட்பாடியில் துரைமுருகனுக்கு எதிராகக் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

வேலூர்: காட்பாடியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு எதிராகப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராமு நேற்று (மார்ச்.16) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதிமுக வேட்பாளர் ராமு
அதிமுக வேட்பாளர் ராமு

வேலூர், காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளரான துரைமுருகனை எதிர்த்து அதிமுக சார்பில் ராமு போட்டியிடுகிறார். இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.‌

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமு, "அதிமுகவின் தொகுதியாக மாறுவதற்கு இது நல்ல வாய்ப்பு. மக்கள் அனைவரும் அதிமுகவிற்கு ஓட்டளிக்க ஆயத்தமாக உள்ளனர். காட்பாடி தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு சட்டப்பேரவை உறுப்பினர் இந்தப் பக்கமே வராமல் இருப்பதும், தொகுதியின் திட்டப் பணிகளை அவர் நிறைவேற்றாததும் எனது வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளன.

இத்தொகுதியில் மாற்றம் தேவை என்பதால் எங்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்துவருகின்றனர். காட்பாடி தொகுதியில் உள்ள சுமார் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகளில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன்" என்றார்.

அதிமுக வேட்பாளர் ராமு

இத்தொகுதியின் திமுக வேட்பாளரான துரைமுருகனை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "எனக்கு துளி பயம் இல்லை. நான் அம்மா வழி வந்தவன். தோழமைக் கட்சிகளின் பலம் இருக்கும்போது எளிதாக தேர்தலை எதிர்கொள்வேன்" என பதிலளித்தார்.

இதையும் படிங்க:'வாக்குறுதிகள் மட்டுமல்ல, மக்களுக்கு தேவையான திட்டங்களையும் நிறைவேற்றுவோம்' - ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details