வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்ப்பட்ட 29 ஊராட்சிகளைச் சேர்ந்த அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு, புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது .
இதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபீல் கலந்துகொண்டு பத்தாயிரத்து 625 புதிய உறுப்பினர்களுக்கு, புதிய உறுப்பினர் அட்டைகள், புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள், வாக்காளர் பட்டியல் ஆகியவற்றை வழங்கினார்.