திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (வயது 50). இவர் தற்போது கைலாசகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராகவும் அதிமுக மாவட்ட பிரதிநிதியாகவும் உள்ளார்.
இவர் வெளிமாநிலத்திலிருந்து பெண்களை அழைத்துவந்து சில மாதங்களாக ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.