தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தலை நடக்கவிடாமல் செய்ய ஸ்டாலின் சதி' - அமைச்சர் கே.சி.வீரமணி ! - அமைச்சர் கே.சி வீரமணி

வேலூர் : தமிழ்நாட்டில் பொய் பிரசாரம் செய்து, உள்ளாட்சித் தேர்தலை நடக்கவிடாமல் செய்ய ஸ்டாலின் சதித் திட்டம் தீட்டுவதாக  ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார்.

Admk meeting

By

Published : Nov 5, 2019, 11:47 PM IST

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அவுசிங்போர்டு தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, 'தமிழ்நாட்டில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதைப் போல், வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றி பெறும். வரும் 2021ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியில் அமருவோம்' என்று கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி வீரமணி

தொடர்ந்து பேசிய அவர், 'திமுகவினர் பொய் பிரசாரம் செய்வதாகவும், எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்று அனைத்து எம்.பி.க்களும் அந்தரத்தில் தொங்குகிறார்கள், அதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் அதிமுக அமோகமாக வென்றதால் தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ஸ்டாலின் நடத்த விடாமல் தடுக்க முயற்சி செய்து வருகிறார்' என விமர்சித்தார்.

இதையும் படிங்க:

லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details