வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து மாதனூர் அடுத்த அகரம்சேரி பகுதிகளில் அதிமுகவின் இணை ஒருங்கினைப்பாளர் கே.பி முனுசாமி பரப்புரை மேற்கொண்டார்.
மாதனூரில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு - admk election campaign
வேலூர்: அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுகவின் இணை ஒருங்கினைப்பாளர் கே.பி முனுசாமி மாதனூரில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியை கொலை செய்தவர்கள் திமுகவிற்குள்தான் இருக்கின்றனர். அவர்களுக்குள் நடந்த பிரச்னை காரணமாக கொலை நடந்துள்ளது . ஆனால் இக்கொலை வழக்கில் ஸ்டாலின் அதிமுக மீது குற்றச்சாட்டு கூறிவருகிறார். இதன்மூலம் அதிமுக அரசின் மீது கலங்கம் கற்பித்து இந்த தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறது. அவரிடம் நல்ல கருத்துகளை எதிர்பார்க்க முடியாது அனைத்தையும் தரம் தாழ்ந்துதான் பேசுவார்.
ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் டெண்டர் விடாமல் அடிகள் மட்டுமே நட்டுவிட்டு, செய்யாத ஒன்றை செய்ததாக கூறி வாக்கு சேகரிக்கிறார்" என்றார்