வேலூர் மாவட்டம், ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் 1991 -1994ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடிகர் சின்னி ஜெயந்த் பேசினார். அதில் , " செல்போன் இல்லாத காலத்தில் நாம் நண்பர்களுடன் முகம் பார்த்துப் பேசினோம். அதனால் தான் ரீ - யூனியன் என்ற ஒன்று உருவாகியுள்ளது.
"சாம்பாருக்கு முக்கியம் ஆனியன்; பிரண்ட்ஸிப்புக்கு முக்கியம் ரீ-யூனியன்": நடிகர் சின்னி ஜெயந்த்! - மஜ்ஹருல் உலூம் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
வேலூர்: சாம்பாருக்கு முக்கியம் ஆனியன், பிரண்ட்ஸிப்புக்கு முக்கியம் ரீயூனியன் என ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் நடிகர் சின்னி ஜெயந்த் பேசியுள்ளார்.
Actor Chinni Jayanth
இக்காலத்தில் முகநூல், செல்போன், வாட்ஸ்அப் என நம்முடைய உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. ஒழுக்கமாகவும், உண்மையாகவும் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். சமுதாய முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வுக்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும்" என்றார். மேலும் அவர் "சாம்பாருக்கு முக்கியம் ஆனியன், பிரண்ட்ஸிப்புக்கு முக்கியம் ரீ - யூனியன்" என பஞ்ச் வசனம் பேசி உரையை முடித்தார்.
இதையும் படிங்க: முள் கிரீடத்தைத் தாங்கி நின்றவள்- 'குயின்' புகைப்படத் தொகுப்பு!