ஆம்பூரில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஏ.சி.சண்முகம்! - ADMK
வேலூர்: ஆம்பூர் பஜார் பகுதியில் வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
A.C.Sunmugam at the ballot box with leaflets
வேலூர் மாவட்டத்தில் நடைப்பெறும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இன்று ஆம்பூர் பூக்கடை பஜார், மண்டித்தெரு மற்றும் காய்கறி பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் மற்றும் பொது மக்களிடம் துண்டு பிரச்சுரங்கள் மூலம் தனது ஆதவாளர்களுடன் வாக்குச்சேகரிப்பில் ஈடுப்பட்டார். மக்களவை உறுப்பினர் முகமது ஜான் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பலர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.