வேலூர்:பொங்கல் திருநாளை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் அரசு அனுமதி பெற்று எருதுவிடும் போட்டிகள் நடைபெற்றன. வேலூர் அருகே மூஞ்சூர்பட்டு கிராமத்தில் இன்று நடைபெற்ற எருதுவிடும் போட்டியில் பார்வையாளராகக் கலந்துகொண்ட இளைஞர் ஒருவரின் கழுத்தில் அதிவேகமாக ஓடிய எருதின் கயிறு சிக்கிக்கொண்டு தெரு முழுவதும் இழுத்துச் சென்ற காட்சி பொதுமக்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் லத்தேரி அருகே பனமடங்கி கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் போட்டியைக் காணவந்த ஒருவரின் மீது அதிவேகமாக ஓடிவந்த எருது முட்டி ஓடிச் சென்றது. அருகேயிருந்த அனைவரும் அலறி அடித்து ஓடினர்.