வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்க உள்ளது. அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஏ.சி. சண்முகத்தின் வேட்புமனு நிறுத்திவைப்பு! காரணம் இதுதானாம்... - வேலூர்
வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி. சண்முகத்தின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏ.சி.சண்முகம்
ஆனால் அவரின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும், ஏ.சி. சண்முகம் அதிமுக வேட்பாளர்என்பதற்கான கடிதம் அளிக்கப்படவில்லை என்பதற்காகத்தான் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.