தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுவற்றில் துளைபோட்டு சுமார் 75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை - theft

காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள நகை அடகுக்கடையின் சுவற்றில் துளையிட்டு சுமார் 75 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.

சுவற்றில் ஓட்டைபோட்டு சுமார் 75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
சுவற்றில் ஓட்டைபோட்டு சுமார் 75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

By

Published : May 24, 2022, 4:47 PM IST

வேலூர்: காட்பாடி அடுத்த சேர்க்காடு கூட்டுச்சாலையில், மேல்பாடியைச்சேர்ந்த அனில்குமார் என்பவர் சொந்தமாக நகை அடகுக் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இன்று மீண்டும் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அடையாளம் தெரியாத நபர்கள் நகை அடகுக்கடை பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் சுவற்றில் துளையிட்டு, பின் நகை அடகு கடையின் பக்கவாட்டு சுவற்றை துளையிட்டு உள்ளே சென்று நகை வைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டியை உடைத்து, அதிலிருந்த வெள்ளி நகை, பொருட்கள் மற்றும் தங்க நகைகள் என சுமார் 75 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட கடை

இது குறித்து திருவலம் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய முயன்றபோது, கொள்ளையர்கள் சிசிடிவி ஹார்டிஸ்கையும் எடுத்துச்சென்றுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தில் ஏதேனும் சிசிடிவி காட்சிகள் உள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை தொடர்பாக திருவலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க திருவலம் காவல் ஆய்வாளர் ஆனந்தன், லத்தேரி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவற்றில் ஓட்டைபோட்ட கொள்ளையர்கள்

ஆட்கள் நடமாட்டமுள்ள சாலையில் நகை அடகுக் கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டு ஆண்டுக்கு முன்னர் இதே போன்று இதே நபரின் கடை மேல்பாடியில் திருடு போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பெண்ணின் கைகளை கட்டி தலை முடியை அறுக்கும் கொடூரம் !- வீடியோ வைரல்

ABOUT THE AUTHOR

...view details