வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோயிலில் ஐந்தாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு 41ஆம் ஆண்டு புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பம் சகிதம் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
ஆம்பூரில் ஆடி வெள்ளி புஷ்ப பல்லக்கு ஊர்வலம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு - vellore
வேலூர்: ஆம்பூரில் ஐந்தாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு எல்லையம்மன் கோயிலில் நடைபெற்ற புஷ்ப பல்லக்கு ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
Aadi velli
நாதஸ்வரம், தாரை தப்பட்டை என பல்வேறு இசைக் கருவிகள் முழங்க ஆம்பூர் முக்கிய வீதிகள் வழியாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கை பக்தர்கள் சுமந்து சென்றனர். அப்பகுதியில் இடைவிடாமல் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டு அம்மன் அருளாசி பெற்றனர்.