தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரிசி ஏற்றிச்சென்ற லாரி:கயிறு கட்டி இறங்கி அரிசி மூட்டைகளை அள்ளிச்சென்ற மக்கள்

வேலூர் அருகே மலைப்பாதையில் அரிசி ஏற்றிச்சென்ற லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கயிறு கட்டி இறங்கி அரிசி மூட்டைகளை அள்ளிச்சென்ற மக்கள்
கயிறு கட்டி இறங்கி அரிசி மூட்டைகளை அள்ளிச்சென்ற மக்கள்

By

Published : Jun 23, 2022, 10:23 PM IST

வேலூர்: தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். லாரி ஓட்டுநரான இவர் கர்நாடக மாநிலத்திலிருந்து 35 டன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவில் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட் அருகே பத்திரபல்லி மலைப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கயிறு கட்டி இறங்கி அரிசி மூட்டைகளை அள்ளிச்சென்ற மக்கள்

இதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் பேர்ணாம்பட் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேர்ணாம்பட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரவு நேரத்தில் விபத்து நடந்ததால் லாரியை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் இன்று(ஜூன் 23) காலை அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 100 அடி பள்ளத்தில் கயிறு கட்டி இறங்கி லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை அள்ளிச்சென்றனர்.

இதையும் படிங்க:10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details