தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் மீறிய உறவு விவகாரம்; நண்பரின் மனைவிக்கு கத்திக்குத்து!!

காட்பாடியில் தனது நண்பரின் மனைவியோடு திருமணத்தை மீறிய உறவிலிருந்த நபர் தகராறில் அப்பெண்ணைக் கத்தியால் வெட்டி உள்ளார்.

திருமணம் மீறிய உறவில் இருந்த நண்பரின் மனைவிக்கு கத்திக்குத்து
திருமணம் மீறிய உறவில் இருந்த நண்பரின் மனைவிக்கு கத்திக்குத்து

By

Published : Dec 10, 2022, 7:10 AM IST

வேலூர்: காட்பாடி அடுத்த கிளித்தான்பட்டறையில் வசித்து வரும் கட்டட தொழிலாளி ராஜேஷ்(28) என்பவரின் மனைவி திலகா(28). ராஜேஷின் நண்பர் சந்தோஷ் (28) என்பவருக்கும் திலகாவிற்கும் திருமணம் மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காட்பாடி காந்தி நகர் பகுதியில் சந்தோஷ், திலகா இருவரும் நடந்து சென்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதில் சந்தோஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் திலகாவின் தலை, காது ஆகிய பகுதிகளில் வெட்டி உள்ளார்.

திலகா கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் சந்தோஷை பிடித்துக் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். விருதம்பட்டு காவல்துறையினர் உடனடியாக திலகாவை மீட்டு அடுக்கும்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கைது செய்த சந்தோசிடம் விருதம்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மாண்டஸ் புயல் எதிரொலி - மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details