தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் கொடிய விஷப்பாம்பு பிடிபட்டது! - deadly poison snake cached Chennai Vellore

வேலூர்: வாணியம்பாடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றித்திரிந்த கொடிய விஷப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

snake

By

Published : Nov 5, 2019, 1:12 PM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது மேட்டுப்பாளையம். நூற்றுக்கும் மேற்ப்பட்டகுடியிருப்புகள் உள்ளன. இங்கு, இரவு நேரங்களில் கொடிய விஷத் தன்மை கொண்ட பாம்புகள் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு குடியிருப்புப் பகுதியில் திடீரென கொடிய விஷத்தனமை கொண்ட மூன்று பாம்புகள் சுற்றித் திரிவதை பொதுமக்கள் கண்டு அச்சம் அடைந்து பாம்பு பிடிக்கும் நபர் இலியாஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு இலியாஸ் வருவதற்குள் இரண்டு பாம்புகள் அருகில் உள்ள ஒரு புதருக்குள் சென்று மறைந்து விட்டது. மேலும் ஒரு பாம்பு அருகில் உள்ள ஒரு வீட்டில் புகுந்தது.

பாம்பை பிடிக்கும் இலியாஸ்

அங்கு வந்த இலியாஸ் வீட்டிற்குள் சென்று அங்கு பதுங்கியிருந்த பாம்பினை லாவகமாக பிடித்தார். மேலும் புதருக்குள் புகுந்த இரு பாம்புகளை பிடிக்க இயலவில்லை.அதனால், தப்பிச்சென்ற இரு பாம்புகள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் அவற்றை தேடி வருகின்றனர்.

பாம்பை பிடித்த இலியாஸ் கூறுகையில், பிடிபட்ட பாம்பு மற்ற பாம்புகளை காட்டிலும் வித்தியாசமாக உள்ளது என்றும் ராஜ நாகம் இனத்தை சார்ந்த பாம்பாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுவதாகவும் கூறினார். பிடிபட்ட அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க:கிணற்றில் தத்தளித்த 4 அடி நீள நாகப்பாம்பு மீட்பு

ABOUT THE AUTHOR

...view details